பளிங்கு போன்ற நீலப்பச்சை நீர், தூய வெள்ளை மணற்பரப்பு, தென்னை மரங்கள் தலை சாய்ந்து பார்க்கும் கடற்கரை – இவைதாம் கல்பேனித் தீவின் அடையாங்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் அங்கு சென்றார் மோடி. அரபிக்கடலின் விளிம்பில், நாற்காலி போட்டு அமர்ந்து யோசித்தார், கருப்பு உடையில் வெள்ளை மணலில் கால் புதைய...
Author - காயத்ரி. ஒய்
புத்தகக் கண்காட்சியின் கூரைகள் உயரமாகப் பிரம்மாண்டமாகவே இருந்தன. ஆனாலும் உள்ளே போன ஐந்து நிமிடங்களில் புழுங்கித் தள்ள ஆரம்பித்து விடுகிறது. குளிர்காலத்திலும் வியர்வை ஊற்றெடுக்கிறது. உள்ளிருந்து வந்ததபின்தான் மூச்சு நிறையக் காற்றுக் கிடைத்த உணர்வு. வெளியில் வழிநெடுக வட்ட அடுக்கில், குச்சி குச்சியாய்...
“பிரிட்டனில் பல ஏழைக் குழந்தைகள் சிறுவயதில் புத்தகம் கிடைக்காததால், வாழ்நாள் முழுவதற்கான வாசிப்பின்பம் கிடைக்காமல் தவறவிடுகின்றனர்.” என்று கவலைப்பட்டிருக்கிறார் புகழ்பெற்ற குழந்தைகள் எழுத்தாளர் மைக்கேல் மார்பர்கோ. (Michael Morpurgo) எண்பது வயதான மைக்கேல், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் குழந்தை...
இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா. காஸாவில் இருபத்தியோராயிரத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருகிறது என்பது தென்னாப்ரிக்காவின் குற்றச்சாட்டு. கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு தங்கள் நாட்டுப் பொதுமக்களைக் கொன்றதற்குப் பதிலடியாக இஸ்ரேல்...
சென்னையில் மிக்ஜாம் புயல் மழை ஓய்ந்த கையோடு அடுத்த மழை ஆரம்பித்துவிட்டது. இது மனச் சேதங்களையெல்லாம் நேர்ப்படுத்தும் சாதக மழை, இசை மழை. சபாக் கச்சேரிகளின் ஆரோஹண ஆலாபனைகளில் மனத்தை உவந்து கொடுக்க வருபவர்கள் முதல் வகை. செவியுணவோடு வயிற்றுக்கும் சிறிது ஈந்து கொள்பவர்கள் இரண்டாம் வகை. வருடத்திற்கு ஒரு...
இந்த வருடத்தில் செய்த முதல் உருப்படியான விஷயம், எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தது. பதினாறு மணிநேர வகுப்பின் முடிவில் மெட்ராஸ் பேப்பரில் எழுதுவதற்காக ஒரு அசைன்மெண்ட் தரப்பட்டது. நன்றாக இருந்த நான்கு கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்து பேப்பரில் போட்டார் ஆசிரியர். அதில் என்னுடைய ‘அரபிக் கடலும்...
“இப்போது சில பெரிய குடும்பங்களில் வெளிநாட்டிற்குச் சென்று திருமணங்களை நடத்தும் புதிய வழக்கம் உருவாகியிருக்கிறது. இது அவசியமா? ஏன் இந்தியாவிலேயே இத்திருமணங்களை நடத்தக் கூடாது? அப்படிச் செய்வதால் அதற்கேற்ற அமைப்புகளும் வசதிகளும் இங்கு வளருமல்லவா? திருமணத்திற்குத் தேவையான பொருட்களை இங்கேயே வாங்குவதால்...
“ஹலோ… ரெயின் கோட் எடுத்துட்டு வந்திருக்கியா?” ஒரு வாரமாக தினமும் தூக்கிக்கொண்டு வந்தேன். ஒரு சொட்டு மழையில்லை. இன்றுதான் காலையில் ‘இனிமேல் எதற்கு?’ என அலமாரியில் சொருகி வைத்தேன். “ஏன் மழை பெய்யுதா?” “தூறல் போடுது. அஞ்சரை மணியாச்சு, நீ இன்னும் கிளம்பலையா? கோட் வச்சிருக்கியா இல்லையா?”...
அயோத்தியில் சுமார் 1800 கோடி செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இராமர் கோயில் பணிகள், திட்டமிட்டபடி அடுத்த மாதத்துடன் நிறைவடைகின்றன. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோலாகலமாகக் குடமுழுக்கு விழா நடைபெறவிருக்கிறது. உயிர்களைக் காக்கும் கடவுள் மஹாவிஷ்ணு. உலகத்திற்கு...
தெருக்களில் உணவகங்களைப் பார்த்திருப்பீர்கள். உணவகங்களாலேயே ஒரு தெரு நிரம்பியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா..? இல்லையென்பீர்களானால், வாருங்கள் சென்னை அண்ணா நகருக்கு. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் அண்ணா நகரின் செகண்ட் அவென்யூவில் மட்டும் இருக்கும் ஹோட்டல்கள், பிரியாணிக்...