Home » Archives for காயத்ரி. ஒய் » Page 2

Author - காயத்ரி. ஒய்

Avatar photo

விழா

மெட்ராஸ் பேப்பர் திருவிழா

மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கோடை வெயில் கால ஞாயிற்றுக் கிழமையாக இருந்த போதிலும் அரங்கு நிறை விழாவாக நடந்தேறியது. அறிவித்திருந்தது போல் சரியாகக் காலை 9.30 மணிக்கு விழா தொடங்கிவிட்டது. ஜீரோ டிகிரி நிறுவனத்தின்...

Read More
மெட்ரோ கதைகள்

தேவ வனம்

மெட்ரோ ரயில் பெட்டிகள் கறுப்புக் கண்ணாடிகளால் மூடப்பட்டவை.  மூச்சு முட்டும் அளவு இறுக்கம் கொண்டவை. அந்த இறுக்கத்தைத் தளர்த்தும் வல்லமை குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. குறிப்பாக, முதல்முறை மெட்ரோவில் பயணம் செய்யும் சிறுவர்கள். ‘அடுத்த நிறுத்தம் ஆலந்தூர், இடதுபுறம் உள்ள கதவுகள் திறக்கும்’...

Read More
மெட்ரோ கதைகள்

வெள்ளையும் கறுப்பும்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . அப்போது மெட்ரோ ரயிலுக்குச் சிவப்பு கறுப்பு வண்ணங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அது நீலமும் கறுப்புமாக மாறியது. இறுதியாக CMRL (சென்னை மெட்ரோ ரயில் லிமிdeட்) லோகோவைத் தொடர்புறுத்தும் விதமாகவும்...

Read More
மெட்ரோ கதைகள்

தயக்கத் திரை

மெட்ரோவுக்குள் தனித் தீவாக இருப்பவர்கள் இளம் தலைமுறையினர். குழுவாக வருபவர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொள்வார்கள். தனியாகப் பயணிப்பவர்கள் காதுகளில் வண்ண வண்ணமான கவச குண்டலங்களை அணிந்து கொண்டிருப்பார்கள். கண்கள் கறுப்புத் திரையில் நிலைத்திருக்கும். சோகம், ஆச்சரியம், குறுநகை எனத் திரையில்...

Read More
மெட்ராஸ் பேப்பர்

உவப்பத் தலைக் கூடல்

மெட்ரோ பெட்டிகள் அமைதியானவை. அவரவர் உலகத்தில் பயணியர் மூழ்கி இருப்பார்கள். தெரிந்தவர்களுடன் மட்டும் பேசிக் கொள்வார்கள். ஒரு பார்வைக்கு துக்க வீடு போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். அப்படி இருப்பதில் சில நன்மைகளும் உண்டு. சிறு ஓசைகளைக் கூடத் தெளிவாகக் கேட்க முடியும். சிறு சிறு விஷயங்களில் சிதறல்...

Read More
மெட்ரோ கதைகள்

அழியாச்சுடர்

ஒரு பெருமழைக் காலம். மெட்ரோ ரயில் அத்தனை வெறுமையாக இருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலெல்லாம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அரசு விடுமுறை எல்லைக்குள் வராமல், வீட்டில் இருந்தே...

Read More
மெட்ரோ கதைகள்

முன் முடிவுகள்

மெட்ரோவுடைய சிறப்பம்சங்களில் ஒன்று, சுத்தம். பளிச்சிடும் தரை, துப்புரவான இருக்கைகள், தூய்மையான காற்று. இவை எல்லாம் கறார் விதிமுறைகளாலும் கண்காணிப்பாலும் பேணப்படுபவை. கண்காணிப்பு வளையத்துக்குள் அடங்காமல் அவ்வப்போது சில விதிமீறல்கள் நிகழும். அரிதாக அவற்றால் சில நன்மைகளும் விளையும். ஒரு அலுவலகக் காலை...

Read More
மெட்ரோ கதைகள்

தோரணை

மகளிர்ப் பெட்டியில் பயணம் செய்பவர்கள் மூன்று வகை. பயிற்சி வகுப்புகள், கல்லூரிக்குப் போகும் இளம்பெண்கள். குழுவாக வருபவர்கள் தங்களுக்குள் சிரித்துப் பேசிக் கொள்வார்கள். மற்றவர்கள் கட்டாயமாகக் காதணிப் பொறியைச் சொருகிக் கொண்டிருப்பார்கள். வயதானவர்கள் குறைந்தபட்சம் ஒரு துணையுடன் வருவார்கள். முற்றிலும்...

Read More
தமிழ்நாடு

ஜென் ஸீ வாக்கு யாருக்கு?

ஒரு தேர்தல் பரப்புரை வாகனம் ஊர்ந்து சென்றது. போக்குவரத்துச் சத்தங்களையும் மீறி பரப்புரைப் பாடலைக் கேட்க முடிந்தது. பள்ளிச் சீருடை அணிந்த சிறுமிகளில் ஒருத்தி ‘தீய சக்தி கோயிங் டீ’ என்றாள். அவர்கள் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கலாம். மெட்ரோவில் ஒரு எட்டு வயதுச் சிறுவன் தன்...

Read More
மெட்ரோ கதைகள்

சக பயணி

மெட்ரோ ரயில்கள் தனியான உலகத்தில் இயங்குபவை. அங்கே குப்பைத் தொட்டிகள் கூட ஸ்டிக்கர் பிரிக்காத சம்புடம் போலப் பளபளக்கும். கத்திரி வெயில் எரித்துக் கொண்டிருக்கும்போதும் பனி வீடு மாதிரி குளிரும். ரயில்கள் குறித்த இடத்தை குறித்த கணத்தில் சென்றடையும். ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும், ஆட்டோ கரெக்ட்டும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!