அமெரிக்காவில் நீண்டதொரு நடைப்பயணத்தை முன்னெடுத்து அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் புத்தத் துறவிகள் சிலர். அவர்களது பயணத்தின் நீளம் மொத்தம் இரண்டாயிரத்து முந்நூறு மைல். சென்ற ஆண்டு அக்டோபர் 26 அன்று தொடங்கப்பட்ட பயணம், இவ்வாண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் நூற்றெட்டு நாள்கள் தொடர்ந்து நடந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கிறது ஃபோர்ட் வொர்த் நகரம். அங்குள்ள ஹூங் டாவோ புத்தர் கோவில் அமெரிக்க-வியட்நாமிய மக்களின் வழிபாட்டுத் தலமாகும். அந்தக் கோவிலிருந்து பத்தொன்பது துறவிகள் அடங்கிய குழு இந்த நடைப்பயணத்தைத் தொடங்கியது. இவர்கள் தேரவாத புத்த மரபினைப் பின்பற்றுபவர்கள். தலைமை பிக்கு பாண்ணக்காரா என்பவர் இவர்களை இப்பயணத்தில் வழிநடத்திச் சென்றார்.
அமைதி, கருணை மற்றும் நல்லிணக்கம் உலகில் செழித்து ஓங்கச் செய்யும் உயர்ந்த நோக்கத்திற்காகவே தாங்கள் நடைப்பயணம் மேற்கொண்டதாகக் கூறுகிறார் பிக்கு பாண்ணக்காரா.















Add Comment