நம் உடலுக்குள் ஒரு கடிகாரம் உண்டு. இதை ‘சர்க்காடியன் ரிதம்’ என்று சொல்வார்கள். இந்தக் கடிகாரம் 24 மணிநேரமும் இயங்கும். தூக்கம், ஜீரணம், ஹார்மோன்கள் எல்லாவற்றையும் இது நிர்வகிக்கும். நாம் சாப்பிடும் நேரம் இந்தக் கடிகாரத்தைப் பாதிக்கும். ‘என்ன சாப்பிடுகிறோம்’ என்பது மட்டும் போதாது, ‘எப்போது சாப்பிடுகிறோம்’ என்பதும் முக்கியம். இந்த அறிவியலை க்ரோனோநியூட்ரிஷன் என்று அழைக்கிறார்கள்.
காலையில் ஓர் அரசனைப் போலச் சாப்பிடு. மதியம் இளவரசனைப் போல. இரவில் பிச்சைக்காரனைப் போல என ஒரு சொலவடை உண்டு. காலையில் இன்சுலின் உணர்திறன் அதிகமாக இருக்கும். அதனால் காலை உணவு எளிதாகச் செரிக்கும். ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்படும். இரவில் சாப்பிட்டால் கொழுப்பு சேரும். ஏனெனில் சாப்பிட்ட பின் அதிக உடல் உழைப்பு இருக்காது. பகலில் சாப்பிட்டால் கொழுப்பு செரித்துவிடும். மாலையில் சீக்கிரமாகச் சாப்பிடுவது நல்லது. தூக்கம் சீராகும். இதய நோய் அபாயம் குறையும். குடல் ஆரோக்கியமும் மேம்படும். ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படும்.
சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே உண்ணும்போது உடலுக்குப் பல அற்புதங்கள் நடக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.















Add Comment