Home » அணையா நெருப்பு
உலகம்

அணையா நெருப்பு

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு ஐரோப்பாவிலிருந்த பழங்குடியினர்கள் இரானில் குடியேறினர். அவர்கள் பஞ்ச பூதங்களை வழிபட்டனர். அஹுரா மஸ்தா என்று தங்களுடைய கடவுளை அழைத்தனர். கிமு 1700இல் ஜரதுஷ்டிரா என்னும் இறை வழிபாட்டாளர் இரானில் வாழ்ந்து வந்தார். ஜரதுஷ்டிராவுக்கு அஹுரா மஸ்தாவின் இறைவார்த்தைகள் கற்பிக்கப்பட்டன. ஜரதுஷ்டிராவின் இறப்புக்குப் பின், ஜோரோஸ்ட்ரிய (Zoroastrianism) மதம் இரான் முழுக்கப் பரவியது. பிற்காலத்தில் தோன்றிய ஆபிரகாமிய மதங்களுக்கு இது முன்னோடியாக அமைந்தது.

கிமு 553இல், சைரஸ் மன்னன் இரானை (பாரசீகம்) ஆட்சி புரிந்தான். சைரஸுக்குப் பிறகு டேரியஸ் ஆண்டு வந்தான். டேரியஸுக்குப் பின் அலெக்சாண்டர் கிரேக்கத்திலிருந்து படையெடுத்து வந்து பாரசீகத்தைக் கைப்பற்றினான். அலெக்சாண்டருக்குப் பிறகு செலூசிட்களும் பார்த்தியர்களும் பாரசீகத்தை ஆண்டனர்.

அதற்குப் பின் சசானியர்கள் படையெடுப்பு நடந்தது. சசானியர்கள் நானூறு வருடங்கள் ஆட்சி செய்தனர். சசானியர்களுக்குப் பிறகு அரேபியர்கள் படையெடுத்து வந்தனர். அவர்கள் இருநூறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். அரேபியர்களுக்குப் பின் செங்கிஸ்கான் பாரசீகத்தைக் கைப்பற்றினான். அவனையடுத்து மங்கோலியர்கள் கிழக்கிலிருந்து ஊடுருவினார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!