Home » நூறு வருட ருசி
உணவு

நூறு வருட ருசி

இன்றைய நாளில் லண்டன் மாநகரின் எப்பகுதிக்குப் போனாலும் காணக்கூடியவை இந்திய உணவகங்கள். இந்தியர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒரே தெருவில் பலவகையான இந்திய உணவகங்களைக் காணலாம். இந்த உணவகங்களின் வாடிக்கையாளர்கள் இந்திய வம்சாவளியினர் மட்டுமல்ல. ஆங்கிலேயர்களுக்கும் இந்திய உணவு மிகவும் பிடிக்கும். லண்டனில் வாழும் பல்வேறு நாட்டவர்களுக்கும் இந்திய உணவகங்கள் சேவை செய்கின்றன.

லண்டனில் இந்திய உணவின் வரலாற்றைப் பார்த்தோமானால், ஆயிரத்து எழுநூற்று எழுபதுகளிலேயே உணவகங்களில் இந்தியச் சமையல் அறிமுகமாகத் தொடங்கிவிட்டது. இந்திய உணவகம் என்று ஆரம்பிக்கப்பட்ட முதலாவது உணவகம் ஹிந்துஸ்தான் காஃபி ஹவுஸ் எனும் பெயரில் 1810ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது லண்டனில் நீண்ட காலமாக இயங்கி வரும் உணவகம் என்றால் வீராஸ்வாமி (Veeraswamy) எனப்படும் உணவகம். இது 16 மார்ச் 1926 அன்று, 99 ரீஜண்ட் ஸ்ட்ரீட் என்னும் முகவரியில் இருக்கும் விக்டோரியா ஹவுஸ் என்னும் கட்டடத்தில் திறக்கப்பட்டது. இந்த நூறு ஆண்டுகளுக்குள் அதன் உரிமைத்துவம் பல கைகளுக்கு மாறினாலும், இன்றுவரை அந்த உணவகம் அதே முகவரியில் இயங்கி வருகிறது. அதே போல காலத்துக்கு ஏற்ப அலங்காரத்திலும் உணவிலும் மாற்றங்களைக் கண்டுள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!