கடிவாளமிடப்பட்ட இணையம்
07-மே-2012.
தேர்தல் முடிந்து மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றார் புதின். நான்கு வருடப் பிரதமர் பதவி அவருக்கு விசுவாசமாக இருப்பவர்களைக் கண்டுகொள்ள உதவியது. எதிரிகளைக் கவர முயற்சி செய்வதில் அவருக்கு எப்போதும் உடன்பாடில்லை.
‘ஒரு சிலருக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது, பலம் மட்டுமே அவர்களுக்குப் புரியும் மொழி’ என்பதில் உறுதியோடிருந்தார். சிறு வயது சண்டைகளின்போது அவரது ஆசிரியரிடமும் இதையே கூறியிருந்தார். கிராமப்புறத் தொழிலாளர் வர்க்கத்தின் நாட்டுப்பற்று அவரை வியப்படையச் செய்தது. ஊழல், பொருளாதாரம் போன்றவை அவர்களுக்கு இரண்டாம் பட்சம். தேர்தலைத் தொடர்ந்த நிலையான ஆட்சியே நாட்டை முன்னேற்றும் என்பதில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால் தேர்தலுக்கு எதிராக நடந்த போராட்டங்களை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.















Add Comment