Home » வருகிறது சவூதி காபி!
உலகம்

வருகிறது சவூதி காபி!

உலகளவில் கச்சா எண்ணெய் வளத்துக்குப் பெயர் பெற்றது சவூதி அரேபியா. அந்நாட்டின் பெயரைக் கேட்டவுடன் பாலைவனங்களும், அதிவெப்ப வானிலையும், எண்ணெய்க் கிணறுகளுமே நினைவில் வரும். அந்த எண்ணத்தை அழித்துத் திருத்தும் விதமாக, பாலைவன தேசத்தில் பசுமைப் புரட்சியாய் பரிணமித்திருக்கிறது ஒரு காப்பி நகரம்.

சவூதி அரேபியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது அல்பாஹாவின் மஷூக்கா நகரம், தற்போது மஷூக்கா ‘காபி நகரம்’ (Coffee City) எனும் பெயரில் மாபெரும் வேளாண் அதிசயமாக உருவெடுத்துள்ளது.

தனது ‘விஷன் 2030’ என்ற திட்டத்தின் கீழ் சவூதி அரேபியா இந்த காபி நகரத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, எண்ணெய் வர்த்தகத்தை மட்டும் நம்பியிராமல் வேளாண் மற்றும் உணவு உற்பத்தித் துறைகளையும் மேம்படுத்தத் தீர்மானித்திருக்கிறது சவூதி அரசு. அதன் ஒருபகுதியான அல்பாஹா காபி நகரம் இத்திட்டத்தின் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!