அரசாங்கத் தொலைக்காட்சியும், வானொலியுமே பொழுதுபோக்குகளாக இருந்த 1980-களின் இறுதியில், `சிரிப்போ சிரிப்பு` என்ற தலைப்பில் ஒரு கேசட் வெளியாகியிருந்தது. அப்போது பிரபலமாக இருந்த பல காமெடி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து உருவாக்கப்பட்ட ஒருமணி நேரத் தொகுப்பு அது. கிட்டத்தட்ட டேப் ரெக்கார்டர் வைத்திருந்த எல்லோருடைய இல்லங்களிலும் சுப்ரபாதத்திற்கு அடுத்தபடியாக இந்த கேசட் இடம் பெற்றிருக்கும். அதன் பிரதி ஒன்று யூட்யூபில் வலையேற்றப்பட்டு 80-களின் குழந்தைகளால் இன்றும் விதந்தோப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதன் உள்ளடக்கத்தை யோசித்துப் பார்த்தால் அப்படி ஒன்றும் தரமிக்க படைப்பாக அது இருந்திருக்கவில்லை. அதில் மிமிக்ரிக் குரலாக ஒலிக்க விட்டவர்கள் அனைவருமே அப்போது தமிழ்க் காமெடி உலகின் உச்சத்திலும் இருந்தார்கள். இருந்தாலும் ஏன் அந்த போலிக்குரல்கள் மீது அத்தனை ஆர்வம் மக்களுக்கு இருந்தது என்ற ஆதாரக் கேள்வி தொக்கி நின்றது.
Add Comment