சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU), வடகிழக்கு ஆசிய நாடுகளின் கடல்மட்ட உயர்வைக் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடல்மட்ட உயர்வின் காரணமாகப் பல ஆசிய நகரங்கள் மூழ்கி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தின் உயரம் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் கடலோரப் பகுதிகளில் இருக்கும் நகரங்கள் சில ஆண்டுகளில் மூழ்கும் அபாயம் உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் சென்னை உட்பட ஐந்து நகரங்கள் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. NTU ஆய்வில், வேகமாக மூழ்கி வரும் பகுதியாக சென்னையின் தரமணி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதி ஆண்டுக்குச் சராசரியாக 3.7 செமீ அளவுக்கு மூழ்குகிறதாம்.
கடலின் உயரம் அதிகரிப்பதே கடல் மட்ட உயர்வு என்று அழைக்கப்படுகிறது. கடலின் உயரம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் கடல் வெப்பமயமாதல். கடல் நீர் வெப்பமடையும் போது கடல் விரிவடைகிறது. இதைத் தவிர பூமி வெப்பமடையும்போதும் கடல் மட்டங்கள் உயர்கின்றன. கடல் நீர் விரிவடைவதால் பனிமலைகளும், பனிப்பாறைகளும் உருகுகின்றன. இதன் மூலம் கடல் மட்டம் இரண்டு முதல் ஐந்து அடி வரை அதிகரிப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.















Add Comment