Home » ஈவிகேஎஸ்: இறுதி வரை காங்கிரஸ்
ஆளுமை

ஈவிகேஎஸ்: இறுதி வரை காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய அண்ணாவுக்குப் பக்கபலமாக இருந்தவர் சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்ட ஈவிகே சம்பத். தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வே.கிருஷ்ணசாமியின் மகன். அவருக்கும் சுலோச்சனாவுக்கும் மூத்த மகனாக 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பிறந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோட்டில் பள்ளிக்கல்வியை முடித்து சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தாத்தா, அப்பா, அம்மா எனக் குடும்பத்தில் அனைவரும் அரசியலில் இருந்ததால் இளங்கோவனுக்கும் இயல்பாகவே அரசியல் ஆர்வம் ஒட்டிக்கொண்டது. கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் காங்கிரசில் இணைந்து செயலாளராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து ஈரோடு நகர, மாவட்ட மற்றும் மாநில அளவிளாலன பொறுப்புகளை வகித்தார்.

1977ஆம் ஆண்டு தந்தை ஈவிகே சம்பத்தின் மறைவிற்குப் பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ஆதரவாளராகச் செயல்படத் தொடங்கினார். 1984ஆம் ஆண்டு அதிமுகவும் காங்கிரசும் இணைந்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டன. அவருடைய அரசியல் குருவான சிவாஜியின் பரிந்துரையின்பேரில் சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!