Home » G இன்றி அமையாது உலகு – 17
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 17

17. A for Alphabet

ஒரு தேடுபொறிச் செயலியைத் தயாரித்த நிறுவனமாகத் தொடங்கிய கூகுள், பல்வேறு நுட்பச் சேவைகளில் ஆராய்ச்சி செய்து, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது. வருங்காலத்தில் கோலோச்சப்போகிறது என்று தெரிந்து பல முன்னணி நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. தொடர்ந்து அடுத்து என்ன என்ற ஆராய்ச்சிகள் செய்துகொண்டே இருக்கிறது. சிற்சில தடுமாற்றங்கள் இருந்தாலும் வளர்ந்து உயர்ந்து வானை எட்டி நிற்கிறது.

2015 ம் வருடத்திலேயே கூகுள் ஒரு தன்னிறைவு பெற்ற நிறுவனம்தான். இனிமேல் அது அடைய என்ன இருக்கிறது என்று அப்போதே நினைத்தனர். மாறாக, அதன் பின்னர் இன்னுமின்னும் வளர்ந்தது. ஆனால் வருங்காலத்தை எப்போதும் முன்கூட்டிக் கணித்து, கணக்கிட்டு இயங்கும், லாரியும், செர்கேயும், அந்த வருடம் ஒரு முக்கிய முடிவெடுத்தனர். ஒரு தாய் நிறுவனத்தை உருவாக்குவது என்றும், அதன் கீழ் கூகுள் உட்பட மற்ற நிறுவனங்களுக்குத் தனித்தனியாகப் பொறுப்புகள் வழங்குவதும் என்பதுதான் அது.

அமெரிக்கச் சட்டத்தின்படி, ஒரு தாய் நிறுவனம் (parent company) அதன் அனைத்துக் கிளை நிறுவனங்களிலும் போதுமான, அதிகார வரம்பைச் செலுத்தவல்ல பங்குகளை வைத்திருக்கும். அதன் மூலமாகத் தனக்குக் கீழ் இயங்கும் இந்நிறுவனங்களின் மீது அதி அதிகாரத்தைச் செலுத்தவல்ல வல்லமையுடனேயே இருக்கும். இதன்மூலமாக அன்றாடப்பணிகளில் கவனம் செலுத்தவேண்டிய குழுமங்களை, தனி நிறுவனமாக அறிவித்துவிட்டால், அந்த நிறுவனத்தின் நிர்வாகம் அந்தப்பொறுப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதைச் சீராக அமைத்துக்கொள்ளும். நீண்ட காலத்தீர்வுகள் அமைய வேண்டிய நிறுவனமென்றால், அதற்கான தனி நிறுவனம், நிதானமாக, தீர்க்கமாக ஆனால் செயல்படு வடிவத்தைத் திறமையாக நிர்மாணித்து அதன் வண்ணம் இயங்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!