21. எதேச்சாதிகாரமும் எதிர்வழக்குகளும்
கூகுள் வெற்றிப்படிகளில் ஏற ஏற, அதன் புகழ் மரத்தில் கற்களும் தொடர்ந்து வீசப்பட்டுக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன. வழக்குகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. பெரும்பாலும் அவை நீர்த்துப்போய்விடுகின்றன என்பதால், முன்பெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து விரிவாக எழுதிக்கொண்டிருந்த பத்திரிகைகள், படிப்படியாக அதனைக் குறைத்துக்கொண்டன.
ஆனால் இந்த வருடத்தில் (2024) இரண்டு பெரிய வழக்குகளைக் கூகுள் கையாள வேண்டியிருந்தது. அமெரிக்க அரசாங்கமே வழக்கை எடுத்து நடத்த வேண்டியிருந்தது. மீண்டும் இனிமேல் கூகுள் – ஆல்ஃபபெட் அவ்வளவுதான் என்ற வழக்கமான சலசலப்புகளும் எழுந்திருக்கின்றன. இதைப்பற்றியும், கூகுளின் எதேச்சாதிகாரக் குற்றச்சாட்டுகள் பற்றியும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பார்டின் (Bard ) போதாமைகளை முன்னிட்டு மேம்படுத்தப்பட்ட செய்யறிவுச்செயலியாக ஜெமினியை அறிமுகப்படுத்தியபோது படிப்படியாக அது சாட் ஜிபிடியை (Chat GPT) யைத் தூக்கிச் சாப்பிடப்போகும் புதிய விடியலாகத்தான் கூகுளால் பார்க்கப்பட்டது. ஆரம்பக்கட்ட நுட்ப விமர்சனங்களும் அதை வழிமொழிந்தன. ஆனால் இந்த வருடம் மார்ச் மாதத்தில் யாரும் எதிர்பாராத அந்தத் திருப்பம் வந்து சேர்ந்தது. மிக முக்கியமாக இரண்டு சங்கதிகளில்.
Add Comment