Home » G இன்றி அமையாது உலகு – 1
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 1

1. உலக நாயகன்

ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு இயங்காத துறைகளில்லை. இது இல்லையென்றால் மொத்த நாளும் முடங்கிப்போகும் அளவிற்கு இதன் அடர்த்தியான பரவல் மானுடர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. வாழ்வில் ஓர் இன்றியமையாக் காரணியாக, நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் கனகம்பீரமாக ஏறி அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் தேவதை கூகுள்.

ஒரு தேடுபொறியென அறிமுகமானது இன்று தேடுதலுக்கான இணைச் சொல்லெனவே மாறியிருக்கிறது. `தேடு` என்ற சொல்லையே `கூகுளிட்டுப் பார்` என்றே மாற்றி உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறது உலகு.

உங்கள் அன்றாட வாழ்வில் எத்தனை பணிகளைக் கூகுள் தேடுபொறி சார்ந்தே மேற்கொள்கிறீர்கள் என்பதைச் சற்று நிதானித்து யோசித்துப் பாருங்கள். காலையில் எழுந்தவுடன் அன்றைய செய்திகளைத் தெரிந்துகொள்ள செய்தித் தாள்களையோ, தொலைக்காட்சியையோ அண்டியிருந்த காலம் கூகுளால் மலையேறிவிட்டது. கைபேசித் திரையை முடுக்கி இரண்டு விரற்பாவல்களில், அன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் கொண்டு வந்து கண்முன் கொட்டுகிறது. ‘படிக்கச் சிரமமா உனக்கு? சரி… கேட்டுத் தெரிந்துகொள்’ என்று செவியோரத்தில் செய்தி வாசிக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சர்வ(ர்)ம் கூகுள் மயம் என்பதை தெளிவாக அழகாகச் சொல்கிறது கட்டுரை. வாழ்த்துகள்

  • கூகுள் பற்றிய ஆரம்பமான தொடர் அருமை. அனைத்துலக தொழில்நுட்ப உலகில் ஆட்டி படைக்கும் ராட்சசனாக ரட்சிப்பவனாக கூகுள் இருப்பதை, இந்த தொடர் மூலம் அறிந்து கொள்ள போகிறேன். இதிலும் ஜி இன்றி அமையாது உலகு என்று ரசனையான தலைப்பில் போட்டதை ரசித்தேன்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!