Home » புதையல் கிடைத்தது, தேடலை நிறுத்தவும்!
சமூகம்

புதையல் கிடைத்தது, தேடலை நிறுத்தவும்!

மைக்கேல் பேக்கர்

தேடிக் கண்டடைதல் என்பது ஆதிமனிதன் காலத்திலிருந்தே மானுடத்தின் அடிப்படை இச்சை. ஒவ்வொன்றாகத் தேடித் தேடித்தான் அது தன் பரிணாமத்தைப் புதுப்பித்துக்கொண்டது. தேடிய அனைத்தையும் அடைந்துவிட்ட பிறகும், தேடுவதற்கு ஏதுமில்லையென்றாலும், புதிய தேடல்களை உருவாக்கிக் கொள்கிறான் நவீன மனிதன்.

ஏழு கடல் ஏழு மலை தாண்டிக் குடியிருக்கும் மந்திரவாதியை காமிக்ஸ் வழி தேடத் தொடங்கும் வளரிளம் பருவக் காலத்திலிருந்து இந்தச் சுவாரசியம் பற்றிக்கொள்கிறது. பிடித்த சுற்றுலாத் தலம், மிகப்பிடித்த உணவு, மனம் கவர்ந்த எதிர்ப்பாலினம், மிகப் பிடித்த புதினமொன்றில் விவரிக்கப்பட்ட களம் என்று பலவாறாக மனிதனின் தேடிக் கண்டுகொள்ளும் இந்தத் தாகம் அவனை விடாது துரத்துகிறது. இவற்றில் புதையல் தேடலும் அடக்கம்.

உலகின் பல பகுதிகளில், மன்னர் காலத்திலோ, போர்ச் சமயங்களிலோ, கொள்ளை நோய்க் காலங்களிலோ பெருஞ் செல்வங்கள் பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டு, அது பற்றிய குறிப்புகள் எழுதி வைக்கப்படுகின்றன. பின்னர் அக்குறிப்புகளின் வழி தேடிச்சென்று அந்தப் புதையலைக் கண்டடைவதின் பின் இருந்த சுவாரசியம் பல மனிதர்களைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!