ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த நாள், இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாற்றின் இருண்ட தினமாகக் கருதப்படுகிறது.
1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பஞ்சாப் மாநிலம் அமிர்த்ஸரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்திய மக்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்தும், தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் நடந்த அகிம்சைக் கூட்டம் அது. கூட்டத்தில் வசந்தகாலத் திருவிழாவான பைசாகியைக் கொண்டாட வந்த பொதுமக்களும் அடக்கம்.
சுமார் பத்தாயிரம் பேர் அங்கே குழுமி இருந்தனர். அவர்கள் யாரிடமும் எந்த ஆயுதமும் இல்லை. கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்லி எச்சரிக்கை எதுவும் விடுக்காமல் நேரடியாகத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டான் ஜெனரல் ரெஜினால்ட் டயர். சிப்பாய்கள் தங்களிடமிருந்த தோட்டாக்கள் தீரும்வரை தொடர்ச்சியாகச் சுட்டனர். பத்து நிமிடங்களில் ஆயிரத்து அறுநூற்று ஐம்பது தோட்டாக்கள் சீறிப் பாய்ந்தன.















Add Comment