இந்தியாவில் ரயில் சேவைகளுக்கான திட்டங்கள் 1830களிலிருந்தே முன்மொழியப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பரீட்சார்த்த முயற்சிகளாக மட்டுமே இருந்தன. 1848ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பதவியேற்ற டல்ஹவுசி பிரபு, ‘ரயில்வே நிமிடங்கள்’ (Railway Minutes) என்ற விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையில் பிரிட்டிஷ் தொழிற்சாலைகளுக்கு அவசரத் தேவையாக இருக்கும் பருத்தி, நிலக்கரி போன்ற மூலப்பொருள்களை இந்தியா முழுவதுமிருந்து எடுத்துச் செல்லவும், பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் விரைவாக அனுப்பவும் ரயில்கள் முக்கியம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட உத்தரவாத அமைப்பு (Guarantee System), தனியார் மூலதன முதலீட்டுக்கு 5% வட்டி கிடைப்பதை உறுதி செய்தது. இதன் விளைவாக, ஈஸ்டர்ன் இந்தியா ரயில்வே (EIR), கிரேட் இந்தியா பெனின்சுலா ரயில்வே (GIPR) போன்ற நிறுவனங்கள் உருவாகின. இவை இந்தியாவில் ரயில்வே கட்டமைப்பைத் துரிதப்படுத்தின.















Add Comment