ஜபாலியா – பாலஸ்தீனத்தின் மிகப் பெரிய அகதிகள் முகாம். 1948ஆம் ஆண்டில் ஐநா சபையால் தொடங்கப்பட்ட இந்த முகாம், 1967 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த முகாமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். காஸாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இதுவும் ஒன்று.
இங்கு வசிக்கும் பெரும்பாலானோரில் இரண்டு தலைமுறையினர் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். இந்த முகாமுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் பாலஸ்தீனத்திற்கான ஐநா உதவி அமைப்பு (UNRWA) தான் செய்து வருகிறது. இவர்களின் கல்வி, மருத்துவம், அடிப்படைத் தேவைகள் என அனைத்தும் இந்த அமைப்பையே சார்ந்துள்ளன.
இந்தாண்டு மார்ச் 2ஆம் தேதி முதல் அடிப்படை மனிதாபிமான உதவிகளைக் கூட காஸாவுக்குள் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இதனால் காஸா முழுவதும், குறிப்பாக இந்த அகதி முகாமில் உள்ளவர்களுக்கு ஐநா அமைப்பால் எந்த உதவிகளையும் வழங்க முடியவில்லை. அதோடு ஒவ்வொரு முறை போர் மூளும்போதும் இஸ்ரேல் ஜபாலியா முகாம் மீது குண்டுமழை பொழியும். இப்போதும் அந்தக் கொடூரம் தொடர்கிறது.














Add Comment