Home » ‘கெத்து’க்கு நிகரில்லை!
திருவிழா

‘கெத்து’க்கு நிகரில்லை!

“மாடுகளுக்கு எப்பொழுது பாய வேண்டும், எப்பொழுது துள்ள வேண்டும், எப்பொழுது தூக்க வேண்டும் என்பவை உள்ளூர நன்கு தெரியும். மைக் சத்தம் கேட்டதும் அவை தயாராகிவிடும். மாடுபிடி வீரர்கள் திமிலைப் பிடித்துத் தொங்கும்போது எப்படிச் சுழன்றால் அவர்கள் தெறித்து விழுவார்கள் என்பதை மாடுகள் நன்கு அறியும் வண்ணம் தான் அவைகளைப் பயிற்சிப்படுத்துவோம். அதையும் மீறி அவர்கள் வீரம் வெளிப்படுவதில்தான் அவர்களுக்குப் பெருமை. இந்த ஒருநாள் போட்டிக்கு மாடுகளும் சரி, மாடுபிடி வீரர்களும் சரி… குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஓர் ஆண்டுவரை கூடப் பயிற்சியில் ஈடுபட வேண்டியிருக்கும்” என்கிறார் அலங்காநல்லூரைச் சேர்ந்த சரவணகுமார்.

மாணிக்கம், மிலிட்டரி, சின்னக் கொம்பன், பெரிய கொம்பன், ராமு, அப்பு, கெட்டவன்- இவை எல்லாம் சினிமா பெயர்கள் அல்ல. ஜல்லிக்கட்டுக் காளைகளின் பெயர்கள். வாடிவாசல் திறப்பின்போது இந்தப் பெயர்கள் உச்சரிக்கப்படும்போது மாடுபிடி வீரர்கள் உஷாராகி விடுவார்கள். அவர்களுக்குப் படபடப்பும் புல்லரிப்பும் எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கும். அதே சமயம் சற்றுப் பயம் கலந்த பார்வையும் எச்சரிக்கையும்கூட இருக்கும். இவை களத்தில் இறங்கும்போது கால் பாய்ச்சலும், உடல் துள்ளலும் அளவுக்கு அதிகமாக இருக்கும். மிகவும் மூர்க்கமாகப் பாயும் குணம் கொண்ட இவை வெளியே வரும் நேரம் வாடி வாசலில் கம்பியைப் பிடித்து உயரத்தில் தொங்கும் வீரர்கள் அதிகம். மைதானத்திற்கு வந்ததும் தான் அவைகளின் செயல்பாட்டைப் பார்த்து வியூகம் வகுப்பார்கள். எத்தனை மூர்க்கமும் வேகமும் உண்டோ, அதற்கேற்பப் பரிசுத்தொகையும் கூடும்.

மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகள் அந்தக் குடும்பத்தினரைப் பொறுத்தவரை விலங்குகள் அல்ல. ரேஷன் கார்டில் இல்லாத உறுப்பினர்கள்… அவ்வளவுதான். திருமணப் பத்திரிகைகளில் கூட அவர்கள் வளர்க்கும் மாடுகளின் பெயர்களைப் பெருமையாகப் போடுவது அவர்கள் வழக்கம். அவர்கள் வளர்க்கும் மாடுகள் மரணமடைந்து விட்டால் ஒரு மனிதனுக்குச் செய்யவேண்டிய சடங்குகளைக்கூடச் சிலர் சிறப்பாகச் செய்து வழியனுப்புவதுண்டு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!