Home » ஜிலேபியின் தங்கை ஜாங்கிரி
உணவு

ஜிலேபியின் தங்கை ஜாங்கிரி

இலேசான புளிப்பும், அளவான தித்திப்பும் முறுக்கு போல நறுக்கெனக் கடிபடும் தன்மையும் கொண்ட பண்டம் ஜிலேபி. மத்தியப் பிரதேசத்தின் காலை உணவில் ஜிலேபிக்கும் இடமுண்டு. தில்லியில் விற்கப்படும் பிரபலமான சாலை உணவு. திருமலை திருப்பதி கோயிலில் ஜிலேபியைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள் எனச் சொன்னாலும் நம்பிவிடுவோம். இது ஏன் திடீரென அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறதென்று பார்த்தால் ஒரு முன்கதைச் சுருக்கம் இருக்கிறது.

சமீபத்தில் ஹரியானா சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் ராகுல் காந்தி. அப்போது ஒரு ஜிலேபிக் கதை சொன்னார். ‘நான் காரில் வரும்போது இங்கு வாங்கிய ஜிலேபியைச் சுவைத்தேன். மிகச் சிறந்த சுவை. என் சகோதரி பிரியங்காவிற்கும் வாங்கிக் கொண்டு வருவதாகச் செய்தி அனுப்பினேன். இந்த ஜிலேபிகளை நாம் ஏன் உலகம் முழுவதற்கும் அனுப்பக் கூடாது? ஜிலேபிகளைச் செய்யும் பெரிய தொழிற்சாலைகளை அமைக்கலாம். அப்படி அமைத்தால் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் பெருகும்.’ என்று பேசினார். இந்தப் பேச்சு தேசிய அளவில் கவனத்தைப் பெற்றது.

அதன் பிறகு எல்லா காங்கிரஸ் மேடைகளிலும் ஜிலேபி இடம்பெற்றது. நாடு முழுக்கக் கிடைக்கவேண்டும். அமெரிக்க அனுப்ப வேண்டும். ஜிஎஸ்டி போடக்கூடாது. இப்படித் தொடர்ந்து பேசுபொருளானதால் தோல்விக்குப் பிறகு ராகுலுக்கு பாஜகவினர் ஜிலேபியை அனுப்பி வெறுப்பேற்றுகிறார்கள். அது அவர்பாடு. சமாளித்துக்கொள்வார். நாம் ஜிலேபியைக் கவனிக்கலாம். இந்த அரசியல் கதையைவிட ஜிலேபியின் வரலாற்றுக் கதை இன்னும் சுவாரஸ்யமானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!