பாட்ரீசியா நிக்ஸன்
உணர்ச்சிகள் எதையும் காட்டாமல் அளவெடுத்த புன்னகையைக் காட்டும் பார்பி பொம்மை. முதல் பெண்மணியாக இருந்தபோதும், தன் குழந்தைகளுக்கும் கணவருக்கும் ஆடைகளை இஸ்திரி போட்டுப் பத்திரப்படுத்தும் குடும்பத் தலைவி. இப்படிப் பலவிதங்களில் அழைக்கப்பட்ட ஒருவரின் கதை இது.
ஆனால் அந்த மென்மையான வெளித்தோற்றத்தின் பின்னால் ஓர் உறுதியான இதயம் இருந்தது. பாலின பேதம், இன பேதங்களையும் கடந்து மனிதநேயம் ஒன்றே உயர்ந்தது என்பதை உணரவைத்த முதல் பெண்மணி பாட்ரீசியா ரையான் நிக்சன்.
1912ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி, கடும் புயல் வீசிய அன்று நெவாடாவில் பிறந்தார் பாட் நிக்சன். அவரது தந்தை வில்லியம் ரையான், தாயார் கேத்தரீன் ஹால்பெர்ஸ்டாட் ஆகியோர் நெவாடாவில் ஒரு சிறிய தோட்ட வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
பாட்ரீசியா தனது பதினேழு வயதிலேயே (1929ஆம் ஆண்டு) பெரும் துயரங்களை எதிர்கொள்ள நேரிட்டது. கொடிய நோயொன்றுக்குத் தாயையும், விபத்தொன்றுக்குத் தந்தையையும் அடுத்தடுத்து பறிகொடுத்தார். தனது இரண்டு இளைய சகோதரர்களைக் காப்பாற்ற வீட்டு வேலை செய்ய தொடங்கினார். மருந்தக மேலாளர், நிழற்பட டெக்னீஷியன், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எனப் பல வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார்.















Add Comment