Home » இளமைச் சூறாவளி
கிச்சன் கேபினட்

இளமைச் சூறாவளி

ஃபிரான்ஸிஸ் கிளாரா

ஃபிரான்ஸிஸ் க்ளாரா

கென்னடி சென்டர் முதல் கோல்டன் விசா வரை எங்கும் எதிலும் டிரம்ப் மயம். அவருடைய பெயரிட்ட பொருள்களை வெள்ளை மாளிகைப் புல்வெளியில் விற்பதும், கார்கள் வெள்ளை மாளிகை வளாகத்தில் பகிரங்கமாக முன்னிலைப்படுத்தப்படுவதும் கண்கூடாக நடக்கிறது. இவற்றுக்கு எந்த நெறிமுறைகளையும் பின்பற்றப்படுவதில்லை.

ஆனால் இது அமெரிக்காவுக்குப் புதிதில்லை. இதற்கு முன்பாகவே ஃபிரான்ஸிஸ் கிளாரா க்ளீவ்லாந்தின் (Frances Clara Cleveland ) முகத்தைப் பல நிறுவனங்கள் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியிருக்கின்றன. ஒரே ஒரு வேறுபாடு: அவர் தனக்காக எந்த அனுகூலமும் அடைந்ததில்லை. அப்போது அமெரிக்கா பொருளாதார மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதை மீட்டெடுக்கத் தன் அழகு பயன்படுமானால் அதை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்றே நினைத்தார்.

அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயதில் முதல் பெண்மணியானவர் ஃபிரான்ஸிஸ். ஒரு பாப் ஸ்டார் போன்ற புகழுடன் வாழ்ந்த ஃபிரான்ஸிஸ் க்ளீவ்லாந்தின் வாழ்க்கை, வியப்பூட்டும் திருப்பங்கள் நிறைந்தது. 1864இல் நியூயார்க்கில் பிறந்தார். இவரது தந்தை ஆஸ்கார் ஃபோல்சம் (Oscar Folsom), குரோவர் க்ளீவ்லாந்தின் (Grover Cleveland) மிக நெருங்கிய நண்பர். ஃபிரான்ஸிஸ் குழந்தையாக இருந்தபோதே, குரோவர் அவருக்கு முதல் ‘பேபி கேரேஜ்’ வாங்கிக் கொடுத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!