கரோலின்
1889ஆம் ஆண்டு. அமெரிக்காவின் அதிபர் மாளிகைக்குப் புதிய குடும்பம் குடி வந்தது. ஆனால் முதல் நாளன்று இரவே அந்தக் குடும்பத்தினர் ஒரு கசப்பான உண்மையை உணர்ந்தார்கள். நாட்டின் மிகச் சக்திவாய்ந்த மனிதர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் நிலவறையில் எலிகளும் கரப்பான்களும் நிறைந்திருந்தன. ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் ஒரே ஒரு கழிவறை. இந்தக் கோரமான நிலையை எதிர்கொண்டவர், புதிய முதல் பெண்மணி கரோலின் லெவினியா ஹாரிசன்.
கரோலினின் குலம் கல்வியின் குலம். அவரது கொள்ளுத் தாத்தா ஆரம்பித்த கல்லூரிதான் இன்றைய புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம். தந்தை ஜான் விதர்ஸ்பூன் ஸ்காட் (John Witherspoon Scott), மையாமி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பிரெஸ்பிடேரியன் தேவாலயத்தில் பாதிரியாகவும் இருந்தார். அன்னை மேரி பாட்ஸ் நீல் (Mary Potts Neal) ஓர் ஆசிரியை.
கற்றறிந்த குடும்பத்தில் பிறந்த கரோலின், மொழிகளிலும் இசையிலும் தேர்ச்சி பெற்றார். கல்லூரிக் காலத்தில் சட்டம் படித்த இளைஞன் பெஞ்சமின் ஹாரிசனை (Benjamin Harrison) காதலித்தார் — அந்தக் காதல் ரகசியமாகவே இருந்தது.















Add Comment