நான்ஸி
ரோமியோ-ஜூலியட், ஆண்டனி- கிளியோபாட்ரா, அம்பிகாபதி-அமராவதி வரிசையில், ரேகனும் நான்ஸியும். ‘நீ இருந்தால்தான் என் வாழ்க்கை முழுமையடைகிறது. நீ என்னைவிட்டுப் பிரிந்து சென்றால், நீ வரும்வரை காத்திருப்பேன், மீண்டும் என் வாழ்க்கையைத் தொடங்க…’ என்ற அமெரிக்க அதிபரின் நெஞ்சை உருகவைக்கும் அமர காதல் காவிய நாயகியின் கதைதான் இது.
மன்ஹாட்டனில் 1921இல் அன்னே ஃப்ரான்சஸ் ராபின்ஸாகப் பிறந்தவர், பெற்றோர் பிரிந்த பிறகு மேரிலேண்டில் அத்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். பள்ளி படிக்கிறபோதே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் காட்டினார். தாயின் இரண்டாம் கணவர் லாயல் டேவிஸ், நரம்பியல் நிபுணர். செல்வச் செழிப்பான வாழ்வு. அதுவே நான்ஸிக்கு கேத்தரின் ஹெப்பர்ன், ஸ்பென்சர் ட்ரேசி போன்ற அப்போதைய பிரபல நடிகர்களுடன் நெருக்கமான தொடர்பைத் தந்தது. பதினான்கு வயதில் வளர்ப்புத் தந்தையின் பெயரை ஏற்று நான்ஸி டேவிஸானார்.ஸ்மித் கல்லூரியில் ஆங்கிலமும் நாடகமும் படித்தார். 1943இல் பட்டம் பெற்ற பிறகு, மார்ஷல் ஃபீல்ட்ஸில் விற்பனை ஊழியராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் தன் குடும்ப நண்பர்களின் ஆதரவுடன் பிராட்வேயில் அடியெடுத்து வைத்தார்.
1940 மற்றும் 1950களில் ஹாலிவுட்டில் நடிகையாக இருந்தார். MGM ஸ்டூடியோ ஏழு வருட ஒப்பந்தம் கொடுத்தது. ‘The Next Voice You Hear’, ‘Night into Morning’, ‘Donovan’s Brain’ போன்ற பதினொரு திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அவர் மிகச் சிறந்த நடிகை அல்ல. அவருக்குத் தொழில் ஆர்வம் என்றுமே இருந்ததில்லை.குடும்ப வாழ்க்கையையே விரும்பினார்.















Add Comment