Home » நிகரற்ற நிறைவு
ஆண்டறிக்கை

நிகரற்ற நிறைவு

கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி

2025ஆம் ஆண்டின் தொடக்கம் வரை ‘நான் ஓர் எழுத்தாளர்’ என்ற நினைப்பு எனக்குத் துளியும் எட்டிப் பார்த்ததில்லை. இதோ ஆண்டின் இறுதியில் என்னுடைய முப்பத்து இரண்டு கட்டுரைகள் மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியாகியுள்ள விந்தை நிகழ்ந்துள்ளது.

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றியே இவ்வருடத் தொடக்கத்தில் ஆசிரியரின் எழுத்துப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். வகுப்பு முடிவடைந்து சில வாரங்களில் ‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ என்னும் என் முதல் கட்டுரையை எழுதத் தொடங்கினேன். அப்போது ஆசிரியரிடம் உரிய அனுமதி பெற்றெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. தரமாக எழுதி அனுப்பினால் கட்டாயம் பிரசுரிக்கப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே எழுதத் தொடங்கினேன். ‘நன்றாக இருக்கின்றது. வரும் இதழில் பிரசுரிக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்’ என்ற ஆசிரியரின் குறுஞ்செய்தியைக் கண்டதும் நான் அடைந்த குதூகலம் என்றும் நினைவிலிருக்கும். தொடர்ந்து கிடைத்த (அப்போதைய) துணை ஆசிரியர் கோகிலாவின் ஊக்கமும் மறக்க இயலாதது.

நான் இதுவரை எழுதிய எல்லாக் கட்டுரைகளும் நிராகரிக்கப்படாமல் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பது மனத்துக்கு நிறைவாக இருக்கின்றது. அது மட்டுமன்றி, என்னுடையது ‘கை வைக்க அவசியமில்லாத எழுத்து’ என்ற ஆசிரியரின் அங்கீகாரமும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Brindha Sivasankaran says:

    வணக்கம் கிருத்திகா,
    உங்கள் கட்டுரைகளைப் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்! உண்மையில் அவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை! தொடர்ந்து எழுதுங்கள்….

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!