வெள்ளை மாளிகையில் பேய்
அந்தப் புதிய வீட்டின் வாசம் இன்னமும் குறையவில்லை. அவ்வீடு பவித்ராவின் கனவு. அவளுக்கென ஒரு வீடு. பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கிறாள். வேலைகள் அனைத்தும் முடிய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாமும் முடிந்து இங்கு வந்து பத்து நாள்கள் ஆகின்றன.
தெருமுனையில் இருந்து பார்த்தால்கூட பவித்ராவின் வீடு அலாதியாகத் தெரியும். காரணம்… பளிச்சென்ற உயர்தர வெள்ளை நிறம். கண்களை உறுத்தாத ஃபினிஷிங். அடர்பச்சை வண்ணம் தீட்டிய அகலமான கேட். அதிலிருந்த அழகான இரும்புப் பூக்கள் பவித்ராவைப் போலவே சிரித்தன.
அன்று பவித்ராவின் புதுவீட்டைப் பார்க்கச் சங்கீதா வந்திருந்தாள். அவள் பவித்ராவின் ஒரே தோழி. “பத்து நாள் கழிச்சுத்தான் வர்ற” அவளைச் செல்லமாய் கடிந்துகொண்டாள் பவித்ரா.
“இல்ல பவி… ஹைதராபாத் போயிருந்தேன்… எங்க ஹெட் ஆஃபிஸ் அங்கதான் இருக்கு… அதான்…” என்றாள் சங்கீதா.
“ஹவ் இஸ் மை ட்ரீம் ஹோம்?” எனக் கேட்டாள் பவித்ரா.
Add Comment