Home » மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா: கொண்டாட்டத் துளிகள்
மெட்ராஸ் பேப்பர்

மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா: கொண்டாட்டத் துளிகள்

மெட்ராஸ் பேப்பரின் முதலாம் ஆண்டு விழா கடந்த ஜூன் முதல் தேதி ஸூம் செயலி வழியாக இனிது நடைபெற்றது. மெட்ராஸ் பேப்பர் அணியைச் சேர்ந்த கோகிலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, துபாயில் இருந்து செல்வி பூர்ணிகா அழகு உச்சரிப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் கே.எஸ்.குப்புசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கல்கி வார இதழின் முன்னாள் ஆசிரியர் சீதா ரவியும் இந்து தமிழ் திசை ஆசிரியர் கே. அசோகனும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

“மெட்ராஸ் பேப்பர் நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கட்டுரைகள் எளிமையாக எழுதப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் பா.ராகவன் தெரிகிறார். இப்பத்திரிக்கை குரலற்றவர்களின் குரலாக இருக்கட்டும்.” என்று வாழ்த்தினார் கல்கி சீதா ரவி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்