மாலே… மணிவண்ணா
சாஃப்ட்வேர் ஒரு ஜந்து. சமர்த்தாக நாம் சொன்னதைச் செய்யும். மால்வேரும் ஒரு வகையான ஜந்துதான். ஆனால் அதன் DNAஇலேயே கெட்டதன்மை பொதிந்துள்ளது.
நன்மை என்று ஒன்று உருவாகும்போது அதன் எதிர்துருவமும் சேர்ந்து தோன்றுவதே உலக இயல்பு. சாஃப்ட்வேர் நன்மை. மால்வேர் எதிர்துருவம்.
‘மால்வேர்’ என்னும் பெயர்தான் தெய்வீகமாக இருக்கும். திவ்யப் பிரபந்தத்தில் வரும் திருமாலைக் குறிக்கும் சொல் போலத் தோற்றமளிக்கும்.
‘மாலே மணிவண்ணா’ எனப் பரவசம் கொள்ளச் செய்யும்படியான தோற்றத்தில் இருக்கும். நம்முடைய மால்வேருக்கும் இதற்கும் எத்தொடர்பும் இல்லை.
சொல்லப்போனால், திருமால் காக்கும் கடவுள். மால்வேரின் நோக்கமோ அழிவு.











Add Comment