04. லாகூர் மூளை
பாகிஸ்தான். லாகூர் நகரம். அங்கொரு சிறிய கடை. கணிப்பொறி தொடர்பான பொருள்கள் விற்கும் கடை. ‘பிரைன் கம்ப்யூட்டர் சர்வீஸஸ்’ என்று கடைக்குப் பெயரிட்டிருந்தனர்.
கணினிகளை ரிப்பேர் செய்வது தொடங்கி பல்வேறு சேவைகளை வழங்கியது இக்கடை.
இதை நடத்தி வந்தவர்கள் இருவர். அம்ஜத் ஃபாருக் ஆல்வி. பாஸித் ஃபாருக் ஆல்வி. இளைஞர்கள். அம்ஜத்தின் படிப்பு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பல்கலையில். இயற்பியல் படித்திருந்தார் அம்ஜத்.
அவருடைய ஆர்வம் கம்ப்யூட்டர்கள் பக்கம் திரும்பியது. அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்று தானே முனைந்து அறிந்துகொண்டார். அவற்றை ரிப்பேர் செய்யும் கலையையும் கற்றார். அதன் பின்னர் நிரல் மொழிகளைக் கற்கத் தொடங்கினார்.











Add Comment