Home » மால்வேர் குடும்பத்தார் – 5
நாள்தோறும் • மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 5

05. செர்னோபிள் வைரஸ்

தைவான். தாதுங் பல்கலைக்கழகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கூட்டத்தில் ஒருவன் போல அமைதியாய் வாழ்ந்த ‘சென் இங்-ஹாவ்’, டிஜிட்டல் உலகை உலுக்கிய கதை இந்த அத்தியாயத்தில்.

சென் இங்-ஹாவ், தாதுங் பல்கலை மாணவர். பெரிய பெயராக இருக்கிறதா? செய்த செயலும் பெரிதுதான். செல்லமாக நாம் ‘சென்’ என்று வைத்துக்கொள்வோம்.

கோடிங் செய்வதில் கில்லாடி சென். தன் திறனை உலகுக்கு எப்படியாவது காட்டிவிடவேண்டும் என்னும் ஆர்வம் கொண்ட துருதுரு இளைஞன்.

முதலில் நாம் க்ரீப்பர் என்றொரு வோர்ம் மால்வேரைப் பற்றி அறிந்துகொண்டோம். அடுத்து ப்ரைன் வைரஸ். இவை இரண்டுமே சாது. பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தவில்லை. ப்ரைன் வைரஸ் ஒரு தொல்லையாக மாறியது. ஆனால் சென் உருவாக்கிய வைரஸுடன் ஒப்பிட்டால் இவை இரண்டும் பாப்பாக்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!