அழுகாச்சிக் காவியம்
இரண்டு ரான்சம்வேர்கள் குறித்து இதுவரை பார்த்திருக்கிறோம். முதலாவது, ஆதிபர்வத்தில் வந்த ‘எய்ட்ஸ் ட்ரோஜன்’. அடுத்தது, கிரிப்ட்டோ லாக்கர்.
இவை இரண்டையும் விஞ்சிய மற்றுமொரு ரான்சம்வேர் வந்தது. அதன் பெயர் ‘வான்னா க்ரை’. WannaCry. உலக நாடுகளை நிஜமாகவே அழவைத்த இந்த டிஜிட்டல் பயங்கரவாதியின் கதை இந்த அத்தியாயத்தில்.
வான்னா க்ரை ஒரு ரான்சம்வேர். ஃபைல்களை லாக் செய்து மிரட்டுவது அதன் டிஎன்ஏவிலேயே உண்டு. ஆனால் இது மிரட்டியது தனிநபர்களை அல்ல. பெருநிறுவனங்களை. மருத்துவமனைகளை. உலக நாடுகளை.
இங்கிலாந்தின் மருத்துவமனைகள் பலவற்றை முடக்கியது வான்னா க்ரை. ஆம்புலன்ஸில் தவிக்கும் நோயாளிகளை எந்த மருத்துவமனைக்கு அனுப்புவது என்று திக்கற்று நின்றது நிர்வாகம்.
இது ஒன்றிரண்டு மருத்துவமனைகளை மட்டும் தாக்கவில்லை. இங்கிலாந்தின் மருத்துவச் சேவை அமைப்பையே திக்குமுக்காடச் செய்தது.











Add Comment