Home » கர்நாடிக் கால்குலஸும் பிகாசோ பிசிக்ஸும்
நகைச்சுவை

கர்நாடிக் கால்குலஸும் பிகாசோ பிசிக்ஸும்

மாணவர்களுக்குப் பாடம் எளிமையாகப் புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்னும் கல்வித்துறையின் இன்றைய கொள்கை சிறப்பானதுதான். ஆனால் அதற்காக ஆசிரியர்களைத் திண்டாடவிடக் கூடாதல்லவா?

இந்தக் காலத்தில் மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, ஆசிரியர்கள் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் கல்லூரியில் படித்த பாடத்திலேயே புதிதாக எதையாவது சேர்த்துப் படிக்கச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் கணக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களைக் கர்நாடகச் சங்கீதத்தையும், ஃபிசிக்ஸ் வாத்தியாரை பிகாஸோ ஓவியத்தையும் படிக்கச் சொன்னால் எப்படி?

ஐஐடி மெட்ராஸின் இயக்குநர், ‘கர்நாடக இசையில் கணிதம் கலந்திருப்பதால்தான் நமக்கு இசை எவ்வளவு கேட்டாலும் சலிப்பதில்லை’ என்கிறார். அதனால் கணக்குப் பாடம் எடுக்கும்போது மாணவர்களுக்குச் சலிப்பு தட்டாமல் இருக்க அதில் சங்கீதத்தை அதில் இணைக்க வேண்டுமாம். முதல் முயற்சியாக, அவர் ஐஐடியில் கணிதத்தையும் சங்கீதத்தையும் இணைத்து புதிய பாடத் திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறாராம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!