சந்திரயான்-3 திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் இஸ்ரோ சந்தித்த பெருஞ்சிக்கல் ஒன்றை நமது நாமக்கல் மாவட்ட மண் தீர்த்து வைத்தது என்பதை அறிவீர்களா? பெரும்பான்மையோர் கவனிக்கத் தவறிய, நாமக்கல் மாவட்டத்துக்காரர்கள் கெத்துக் காட்ட வேண்டிய விஷயம் அது. அப்படி அவர்கள் மார்தட்டிக் கொள்ளும்படியாக என்ன நடந்தது..?
நிலவில் செயற்கைக் கோளை இறக்கும் திட்டம் கிட்டத்தட்ட வெற்றியான சமயத்தில் நமது விஞ்ஞானிகளுக்கு இருந்த சவாலான விஷயம், அந்த செயற்கைகோளில் இருந்து ரோவர் எனப்படும் ஊர்துகலம் இறங்கி, நிலவு மண்ணில் ஊர்ந்துசென்று, நிலவின் தட்பவெப்பம், புவி அமைப்பு, கனிம வளங்கள் மற்றும் இதர சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும். புகைப்படம் எடுக்க வேண்டும். அவற்றை அது சரியாகச் செய்ய வேண்டுமென்றால், நிலவில் செய்ய வேண்டிய வேலைகளை இங்கு ஒத்திகை பார்த்தாக வேண்டும்.
ஒத்திகை பார்ப்பதற்கு நிலவில் உள்ள மண் டன் கணக்கில் வேண்டும். இந்த சமயத்தில் அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் இந்தியாவுக்கு உதவ முன்வந்தது. அது எப்படியென்றால், நிலவின் மண்ணை ஒத்த மண்ணை ஒரு கிலோ (இந்திய மதிப்பில்) ரூபாய் 15,000 விலையில் விற்பனை செய்ய முன்வந்தது. சந்திராயன் ஆராய்ச்சிக்கான பட்ஜெட்டில் பெரும்பகுதி, அதாவது பலகோடி ரூபாய்கள் மண் வாங்குவதற்கு மட்டுமே செலவாகிவிடும் என்பதனால், மாற்று வழியைப் பார்க்கும் கட்டாயத்தில் இந்திய விஞ்ஞானிகள் இருந்தபோது அவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்ததுதான் நமது நாமக்கல் மாவட்ட மண்.
good one sir. new information