பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின்போது பதற்றத்தைத் தணிக்க உதவியதாக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நோபல் பரிசு தரவேண்டும். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கையெழுத்திட்ட இப்படியான ஒரு பரிந்துரைக் கடிதம் நோபல் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கமிட்டியின் கைக்குக் கூட போய்ச் சேரவில்லை. அதற்குள் அதிபர் டிரம்ப் உத்தரவுப்படி அமெரிக்க விமானப் படை ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. கமிஷன் தொகைக்குக் கடிதம் அனுப்பிய பாகிஸ்தான் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறது.
இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று இருக்கிறது. 1939ஆம் ஆண்டு, ஸ்வீடனைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் கோட்ஃப்ரிட், அடால்ஃப் ஹிட்லரை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்தார். ஆனால், இந்தப் பரிந்துரை தீவிர எதிர்ப்புகளைச் சந்தித்தது. இது ஒரு நையாண்டித்தனமான பரிந்துரை என்று பின்னர் எரிக் கோட்ஃப்ரிட் விளக்கமளித்தார். ஹிட்லரின் கொள்கைகளையும் செயல்களையும் விமர்சனம் செய்யவே இவ்வாறு செய்ததாகக் கூறினார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு இத்தாலியச் சர்வாதிகாரி முசோலினியின் பெயர் ஒருமுறையும், சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் பெயர் இரண்டு முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவை காமெடிப் பரிந்துரைகள் இல்லை. சீரியஸாகவே கேட்டுள்ளார்கள். அமைதிக்கான நோபல் பரிசு என்பது மக்களை மட்டையாக்கி, ஊரையே மயான அமைதியாக்குவதற்கான பரிசு என அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.















அடுத்தது நோபல் கமிட்டி பற்றிய விலாவரி தகவல்கள்!
விஸ்வநாதன்
கட்டுரை ஆசிரியர் திரு.பூபதிக்கு நன்றி, பல அரிய தகவல்கள்.