Home » நீலமலை ரகசியம் – 21
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 21

21. கெல்சோ, குன்னூர்ப்பாதை மற்றும் சல்லிவனின் அந்திமம்

லஷிங்டனின் தீவிரமான முன்னெடுப்புகளும், சல்லிவனின் கனவுகளும் இணைந்து செயல்பட்டபோது நீலமலைக்கான திட்டங்கள் வெகு வேகமாக நிறைவேறிக்கொண்டிருந்தன. 1820களின் இறுதியில் மிக முக்கியமான ராஜபாட்டையில் நீலமலை பீடு நடை போட்டுக்கொண்டிருந்தது. எல்லாம் நன்றாகப் போவது போலத்தான் இருந்தது. ஆனால் ஒரு முக்கிய முடிவு சல்லிவனின் ராஜாங்க மதிப்பையே மாற்றவல்லதாக மாறும் என்று அவரே நினைத்துப் பார்க்கவில்லை.

நீலகிரியை அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாக அரசாங்கத்தின் மிக முக்கிய இடமாகவோ, இரண்டாவது தலை நகராகவோ மாற்றுவதுதான் சல்லிவனின் நீண்டகாலக் கனவு. அதற்கு முதல்படி, நிறைய மக்கள் வசதியாக இங்கு வாழ்வதைப் பற்றிய பிரசாரம் முக்கியம். சாலைகள், நீர்வசதி, கட்டடங்கள், மருத்துவமனை எல்லாம் சரி, பிரிட்டிஷின் மிக முக்கிய அங்கமான ராணுவத்தையும் அங்கே பிரஸ்தாபிக்க வேண்டும் என்பதும் அவர் திட்டங்களில் ஒன்றாக இருந்தது.

ராணுவப் பயிற்சி மையம், அதற்கான தளம் இரண்டும் வந்துவிட்டால் பாதுகாப்பு என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு எதிரிகள் செய்துகொண்டிருக்கும் நீலமலைக்கு எதிரான திட்டங்கள் தவிடுபொடியாகும் என்று அவர் நினைத்தார். ஆனால் அதன்வழியே தன் வாழ்வின் மிக வலுவான எதிரியை இம்மண்ணுக்கு அழைத்து வருகிறோம் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!