Home » நீலமலை ரகசியம் – 27
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 27

27. நீலப்பாதைக்குப் பச்சைக்கொடி

முதல் ராட்சச குகையின் வாய் பிளந்த பிறகு, ரயில்வே பாதையின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கல்லார் நிலையத்திலிருந்து குன்னூர் வரையில் செல்லும் மொத்தப் பாதையின் திட்டம் வகுக்கப்பட்டது. வழியெங்கும் பதினாறு பாறைகளைப் பிளக்க வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டது. சில இடங்களில் பாதாளங்களாக அமைந்திருந்த பகுதிக்குப் பாலங்கள் கட்ட வேண்டியிருந்தது. நீரோடைகள் கடக்கும் இடங்களைச் சோதித்து, அவற்றுக்கு மேலே பாலம் அமைத்தால் தாங்குமா என்று பரிசோதிக்க வேண்டியிருந்தது. பாதை வளைந்து செல்லும்போது அதற்கேற்றவாறு அங்கே எப்படித் தண்டவாளங்கள் அமைக்க வேண்டும் என்று குறித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

நிச்சயம் எளிய பணி இல்லை. ஏகப்பட்ட சவால்கள் இருந்தன. நுட்பங்களோ கருவிகளோ வளராத காலம். காலநிலையும் ஈரப்பதமும் ஒத்துழைக்காது. காற்று உதவி செய்யாது. மழை பெய்தால் வேலை பார்க்கவே முடியாது. வெயிலுக்காக இந்த மலையில் காத்திருக்க முடியாது. முரண்டு பிடிக்காத மனிதவளம் தேவை. அமானுஷ்யப் பயங்கள் இருந்தன. எப்போதும் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருந்தது. சட்டென்று அரசாங்கம் இன்றிலிருந்து வேலை செய்யவேண்டாம், அடுத்த தவணை வரும்போது ஆரம்பிக்கலாம் என்று முரண்டு பிடிக்கும். அப்படித்தான் இந்தப் பணி நாற்பது வருடங்களாகத் திட்டமிடப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட கல்லார் நிலையத்திலேயே பத்து வருடங்கள் காத்திருந்தது.

எல்லாவற்றையும் கடக்க வேண்டும். எல்லாச் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் நல்ல ஆரம்பம் ஒன்று வேண்டும். ஆதார நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எது வேண்டுமானாலும் செய்கிற ஆளுமை வேண்டும். ஜார்ஜ் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். அமானுஷ்ய பயம் கொண்டவர்களுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் கிறிஸ்துவப் பாணியில் ஒன்றும், ஆதிக்குடிகளின் பாணியில் ஒன்றுமாக இரண்டு பூசைகளை ஏற்பாடு செய்தார். கூலிக் குழுத் தலைவர்களுக்குப் பாறைகளை வெடிப்பதிலிருந்த அறிவியல் பின்னணியை எளிமையாக விளக்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!