106 முகங்கள்
கவி புதுசா ஒரு கட்டுரை எழுதிக்கிட்டு இருக்காம்பா. பிரமாதமா இருக்கு.
தருமுக்கு என்னய்யா. அவனுக்கு இருக்கற தெறமைக்கு எவ்ளோ வேணா எழுதலாம்.
சண்டையை விட்டு ஒழிச்சுட்டு அவன் இது மாதிரி மட்டுமே எழுதலாம் இல்லையா.
எதைப்பத்தி எழுதிக்கிட்டு இருக்கான்.
ஸ்ரீலங்கா பத்தி. இங்க யாருக்குமே தெரியாத பல விசயங்களை எடுத்து ஹிஸ்டாரிக்கலா எழுதிக்கிட்டு இருக்காம்பா.
ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில் இருந்த சந்தில், வசந்தகுமார் மூலம் இதைக் கேள்விப்பட்டதும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இவன் சைக்கிள் ராயப்பேட்டை பைலட் தியேட்டர் அருகே இருக்கும் க்ரியாவுக்கு எதிரே இருந்த தெருவில் நுழைந்து, கீழே டீக்கடையும் மாடியில் தருமுவின் அறையும் இருந்த கட்டடத்தின் முன் நின்றது.
Add Comment