125 விஸ்கி
மதிய உணவு நேரத்தில், இவன் சீட்டுக்குப் பின்னால் இருந்த ஈ ரேஞ்சிற்கு, எப்போதாவது ஒருவர் வலது கையைத் தொடைமேல் வைத்தபடி இழுத்து இழுத்து நடந்து வருவதைப் பார்த்திருந்தான்.
இன்ஸ்பெக்டர் பிரமோஷனுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கவேண்டும் என்று, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருந்தாலும் நன்றாக ஓட்டவேண்டுமே என கேஷியர் விஸ்வநாதன் மதிய உணவு இடைவேளையில் ஓட்டிப் பழகிக்கொண்டிருந்ததால், மேலிருந்து வந்தவர் இன்ஸ்பெக்டர் என்றுக் கேள்விப்பட்டபோதே வியப்பாகத்தான் இருந்தது. அடுத்துத் தெரியவந்த, அவர் ஹாக்கி வீரர் என்கிற விஷயம், அதை ஒன்றுமேயில்லை என்று ஆக்கிவிட்டது. திலீப் அவரிடம் ரொம்ப மரியாதையாக நடந்துகொள்வதையும் கவனித்தான். அதை, உடல்நிலை சரியில்லாதவரிடம் காட்டுகிற கரிசனமாகத்தான் ஆரம்பத்தில் இவன் நினைத்திருந்தான்.
ஒருநாள், பேச்சோடு பேச்சாக அவரைப் பற்றி அவர் யார் என்ன என்று விசாரித்தபோது, ‘விஸ்வநாத்தைப் பத்தி உனக்குத் தெரியதா’ என்றார் மோகன்.
‘ஹாக்கி பிளேயர்னு யாரோ சொன்னாங்க.’
Add Comment