Home » ஆபீஸ் – 66
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 66

66 தோற்றம்

சும்மா பஸ்ஸில் போனால் போய்க்கொண்டே இருந்தது. எவ்வளவு பெரியது என்கிற பிரமிப்பை உண்டாக்கிற்று டெல்லி. அதை, அங்கேயே பல வருடங்களாய் வசிக்கிற வெங்கட் சாமிநாதன் தில்லி என்றும் ஊர்ப்பக்கமிருந்து போய் அந்த ஊர்க்காரனாகவே ஆகிவிட துடித்துக்கொண்டிருந்த சாரு நிவேதிதா டெல்லி என்றும் குறிப்பிட்டார்கள்.

மெட்ராஸுக்கு வந்திருந்தபோது, ‘பிரகதி மைதான்ல நடக்கற கண்காட்சியைப் பாக்கவே ஒரு வாரம் ஆகும்; 365 நாளும் டெல்லில எங்கையாவது  சினிமா டிராமா டான்ஸ்னு எதாவது நடந்துக்கிட்டே இருக்கும்; எல்லாம் ஃப்ரீ; ஆனா சம்பளமெல்லாம் அதைப் பாக்க பஸ்ல போகவே சரியா போயிடும்’ என சிறுபத்திரிகைகளில் அவன் எழுதிக்கொண்டிருந்ததைப் போலவே அதீதமாக டெல்லி டெல்லி என்று விட்டுக்கொண்டு இருந்ததையும் அதைக் கேட்டு சமயவேல் சாரு நிவேதிதா போன பிறகு, ‘365 நாளும் ஒருத்தன் கலை இலக்கியமாவே இருந்தா பைத்தியம் பிடிச்சிடுமேப்பா. அதான் இந்த டெல்லிக்காரங்க ரெண்டுபேருமே இப்படி இருக்காங்க’ என்று சொல்லவும் நம்பிராஜன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்ததும் நினைவுக்கு வந்தன.

ஆனால், நேரில் பார்க்கையில் அவரவர் பார்வைக்கேற்ப டெல்லியின் பிரம்மாண்டம் இன்னும் பலதாகவும் விரியக்கூடியதாக இருக்கும்போலத் தோன்றியது. அதே சமயம், ‘டெல்லி ஒரு பெரிய கிராமம்’ என்று தி. ஜானகிராமன் குறிப்பிட்டதும் நினைவுக்கு வந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!