116. இன்சூரன்ஸ் மோசடிகள்
ஆயுள்காப்பீடு என்பது 1818ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான ஒரு சமாசாரம். இந்திய மண்ணில் தொடங்கப்பட்ட முதல் இன்சூரன்ஸ் கம்பெனி ஒரியண்டல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிதான்.
அந்தக் கால இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஐரோப்பியர்களின் தேவைகளைத்தான் கவனித்தனவே ஒழிய இந்தியர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் இந்தியர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்க முன்வந்தபோது, அபரிமிதமான பிரிமியம் வசூலித்தனர்.
1870ல் தொடங்கப்பட்ட பாம்பே மியூச்சுவல் லைஃப் அஸ்யூரன்ஸ் சொசைட்டிதான் முதல் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம். 1896ல் பாரத் இன்சூரன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அடுத்த 40 ஆண்டுகளில் இன்சூரன்ஸ் துறை 176 நிறுவனங்கள் சுமார் 300 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் அளவுக்கு நல்ல வளர்ச்சி கண்டது.
Add Comment