138. சாஸ்திரி மரணம்
ஐ.நா.வின் தலையீட்டால் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட, பிரதமர் சாஸ்திரி பாராளுமன்றத்தில் அதனை அறிவித்தபோது, அவரது தைரியமான தலைமையைப் பாராளுமன்றம் பாராட்டியது.
ஆனாலும், பாகிஸ்தான், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக, போர் நிறுத்தம் என்பது காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் மட்டுமே சாத்தியம் என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்தது.
டெல்லியில் இரு பொது நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரையில் சாஸ்திரி, “காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. அது இந்திய நிலப்பரப்பின் அங்கமாகவே தொடரும்” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
அடுத்து ஜெய்பூரில் ஒரு பேரணியில் கலந்துகொண்டபோது, இன்னும் ஒரு படி மேலே போய், “எதிர்காலத்தில் காஷ்மீரைக் கவர்ந்துகொள்ளலாம் என்று பாகிஸ்தான் கனவு கண்டால், அது ஒருக்காலும் நிறைவேறாது” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.
Add Comment