159 குறுக்கு விசாரணை
பிரதமர் இந்திரா காந்தி அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நேரில் வந்து சாட்சியமளிப்பதற்கு மார்ச் மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகள் முடிவு செய்யப்பட்டன.
அப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் செயல்பட்டு வந்த பழைய காங்கிரஸ் அலுவலகம்தான் பிளவு படாத காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருந்து வந்தது.
எனவே, ராஜ் நாராயண் தரப்பு, பழைய காங்கிரஸ் தலைவர்களைத் தொடர்பு கொண்டு, இந்திரா காந்திக்கு எதிராக கேஸை வலுப்படுத்த அந்த அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் பழைய ஆவணங்கள் ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்தது.
காங்கிரஸ் அலுவலகத்தின் பழைய குப்பைகள் கிளறப்பட்டன. அங்கே கிடைத்த பல ஆவணங்கள் சாந்தி பூஷணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த ஆவணங்கள் மூலமாக பல சுவாரசியமான தகவல்கள் தெரிய வந்தன என்றாலும் ஒரு கடிதத்தைத் தவிர மற்ற எதுவும் இந்த வழக்குக்கு உபயோகமானதாக இல்லை.














Add Comment