Home » ஒரு குடும்பக் கதை – 158
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 158

158 ராஜ் நாராயண் தேர்தல் வழக்கு

1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் முடிவு வெளியான 45 நாள்களுக்குள், தேர்தல் முடிவு குறித்த வழக்கு போட முடியும்.

இந்திரா காந்தியிடம் தோல்வி அடைந்த ராஜ் நாராயண், தனக்குத் தெரிந்த அலகாபாத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்திர ஸ்ரீவத்சவா என்ற வக்கீல் மூலமாக வழக்குக்கான பூர்வாங்கப் பணிகளை முடித்தார்.

அவரது குற்றச்சாட்டுக்களில் முக்கியமானவை பின்வருமாறு:

வாக்குச் சீட்டுக்களில் ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திரா காந்தியின் தேர்தல் ஏஜென்ட்டான யஷ்பால் கபூர், இந்திரா காந்திக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதற்காக ஸ்வாமி அத்வைதானந்த்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, அவரை தேர்தலில் நிற்க வைத்தார்.

இந்திரா காந்திக்கு ஓட்டுப் போடுவதற்காக அவர் சார்பில் போர்வைகள், வேட்டி, மது இன்னபிற வாக்காளர்களுக்கு, லஞ்சமாகத் தரப்பட்டன.

ஏராளமான வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி வழங்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!