Home » ஒரு குடும்பக் கதை -160
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை -160

160 . தீர்ப்பு என்ன?

இந்திரா காந்தியிடம் வக்கீல் சாந்தி பூஷண் நடத்திய குறுக்கு விசாரணை முதல்நாள் அசுவாரசியமாகத்தான் இருந்தது.

மறுநாள் காலை கோர்ட் கூடியபோது, முதல் நாள் போலவே இந்திரா காந்தி கண்களில் தன்னம்பிக்கை பளிச்சிட்டது.

தனது குறுக்கு விசாரணையைத் தொடர்ந்தார் சாந்தி பூஷண். ஆனால் தொண்ணூறு நிமிடங்களில் முடித்துக் கொண்டார்.

அவர் தனது குறுக்கு விசாரணையை முடித்துக் கொண்டார் என்பதைவிட, இந்திரா காந்தியின் கதையை முடித்துவிட்டார் என்பதே சரி!

எழுத்து பூர்வமாக அளித்த பதிலுக்கும், குறுக்கு விசாரணையின்போது அவர் அளித்த பதிலுக்கும் இருந்த முரண்பாட்டினைப் பிடித்துவிட்டார் சாந்தி பூஷண்.

எழுத்துப்பூர்வமான பதிலில் தனது தொகுதி பற்றிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இறுதி முடிவு ஜனவரி 29 அன்று எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், குறுக்கு விசாரணையின்போது தான் ரேபரேலி தொகுதியில் போட்டியிட பிப்ரவரி முதல் தேதிதான் முடிவெடுத்ததாகக் கூறினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!