Home » ஒரு குடும்பக் கதை – 185
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 185

185. அறுபது லட்சம் மீட்பு

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது முதன்மைச் செயலாளர் ஹக்ஸர் ஆகியோரது குரலில் தொலைபேசி மூலமாக பாரத ஸ்டேட் வங்கி நாடாளுமன்ற வீதிக் கிளையில் தலைமைக் கேஷியர் மல்ஹோத்ராவுடன் பேசி, அறுபது லட்சம் ரூபாயைச் சுளையாகக் கொண்டு போன ஆசாமியின் பெயர் ருஸ்தம் சோரப் நகர்வாலா. இந்திய ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றியவர்.

பிறந்த ஊர் பூனா. கல்லூரிப் படிப்புக்குப் பிறகு 1943 முதல் 1951 வரை இந்திய ராணுவத்தில் பணி. ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜப்பானீஸ், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி என்று பல மொழிகள் தெரியும்.

பிரதமரைப் போலப் பேசி ஒரு மோசடி நடந்திருப்பது வரலாறு காணாத குற்றம் அல்லவா? டெல்லி போலிஸ் முடுக்கிவிடப்பட்டது.

களமிறங்கிய டெல்லி போலிஸ், பேங்க் மோசடி குறித்து வெகு நேர்த்தியாக விசாரித்து, நகர்வாலாதான் இதைச் செய்தவர் என்பதை உறுதிப்படுத்தியது. அவரைப் பிடிக்க வலை விரித்தது.

உதவி கமிஷனர் காஷ்யப் தலைமையில் ஒரு தனிப்படை, நகர்வாலா தங்கியிருந்த தர்மசாலாவுக்குச் சென்றது. அப்போது நகர்வாலா அங்கே இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!