189. ஜகஜீவன் ராம் கொடுத்த அதிர்ச்சி
பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளால் இந்திரா காந்தியைத் தேர்தலில் தோற்கடிப்பது இயலாத காரியம் என்று மற்ற தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினார்கள், ஜெயப்பிரகாஷ் நாராயண் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்.
சிறையில் இருந்த எதிர்க்கட்சியினர் எல்லாம் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டு உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட இருந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள் என்பதுதான் யதார்த்தம்.
எதிர்க்கட்சிகளுக்குத் தேர்தலுக்குத் தயாராவதற்குப் போதிய அவகாசம் தராமல் தேர்தலை நடத்தி வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள இந்திரா காந்தி திட்டமிட்டிருக்கிறார் என்பதே அவர்கள் எல்லோருடைய கருத்தாகவும் இருந்தது.
காங்கிரஸ் காரியக் கமிட்டி பிப்ரவரி 2ஆம் தேதி கூடுவதாக இருந்தது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, மத்திய விவசாய அமைச்சராக இருந்த ஜகஜீவன் ராம் இந்திரா காந்தியை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார்.














Add Comment