199. உயிர் காத்த நெடுமாறன்
மதுரை விமான நிலையம் வந்திறங்கிய இந்திரா காந்தி, மக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு காரணமாக மிகுந்த மகிழ்ச்சியோடு காரில் தெற்கு வெளி தெருவுக்குள் நுழைந்தபோது, கறுப்புக் கொடி எதிர்ப்பு என்ற பெயரில் கூடி இருந்த தி.மு.க.வினர் இந்திரா காந்தியைத் தாக்குவதற்குப் பாய்ந்தார்கள்.
‘இந்திரா காந்தி ஒழிக! ஊழல் ராணி ஒழிக!’ என்று தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினார்கள்.
சட்டென்று நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட நெடுமாறன், காரின் பின் சீட்டில் இந்திரா காந்தி சற்று உயரத்தில் அமர்ந்துகொள்வதற்காக வைக்கப்பட்டு இருந்த தலையணைகளை எடுத்து, பின் சீட்டில் இந்திரா காந்தியை அப்படியே படுக்க வைத்து, அவரை அந்தத் தலையணைகளால் மூடி மறைத்தார். அந்தத் தலையணைகளின் மீது குப்புறப் படுத்துக் கொண்டார் நெடுமாறன்.
காவல் துறையினர் கூட இந்திரா காந்தியை அந்தத் தாக்குதல் சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற நெருங்க முடியாத வகையில் தி.மு.கவினர் காரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். காரின் பின் சீட்டின் மீது சரமாரியான தடியடி நடந்தது. தலையணைகளுக்கு அடியில் இருந்த இந்திரா மீது ஒரு அடி கூட விழாமல் அனைத்தையும் நெடுமாறன் வாங்கிக் கொண்டார். பல நிமிடங்கள் அவர் மீதான தாக்குதல் நீடித்தது.















Add Comment