இந்திரா காந்தி மற்றும், அவருடைய அத்தை விஜயலட்சுமி பண்டிட் இருவரது அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அவர்கள் இருவரையும் ஐக்கிய மாகாணத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள காளி என்ற கோடை வாசஸ்தலத்துக்குப் போய் வசிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால், இருவரும், அதற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர்களை அரசு மீண்டும் கைது செய்தது.
1942 மே மாதம் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இந்திரா, 1943 மே 13-ஆம் தேதி வரை எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். தன் சிறை வாசம் பற்றி பின்னாளில் குறிப்பிடும்போது, “அது கஷ்டங்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் மன உறுதியை அதிகரித்தது” என்றார்.
விடுதலையானதும், அலகாபாதின் வெயில் தாங்க முடியாமல் பம்பாய் மாகாணத்தில் இருக்கும் பஞ்சாகினி என்ற மலை வாசஸ்தலத்துக்குப் புறப்பட்டார். சில நாட்களில், சிறையிலிருந்து விடுதலை பெற்ற ஃபெரோசும் அங்கே வந்து சேர்ந்தார். குளுமையான சூழ்நிலையில் ஃபெரோசும், இந்திராவும் நிறைய நடந்தார்கள்; நிறையப் பேசினார்கள். சந்தோஷமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
Add Comment