45. அதிர்ச்சி வைத்தியம்
மத்திய மாகாணத்தின் சட்டசபையில் ஸ்வராஜ் கட்சியின் தலைவராக இருந்த ஸ்ரீபாத பல்வந்த் தாம்பே, பிரிட்டிஷ் கவர்னரின் தலைமையில் இயங்கிய அமைச்சரவையில் இடம்பெற்ற விவகாரத்தில் மோதிலால் நேரு பெரும் அதிர்ச்சியுற்றார். அவருக்குச் சாதகமாக இன்னும் சில ஸ்வராஜ் கட்சி முக்கியஸ்தர்கள் நடந்து கொண்டதும், பொறுப்புணர்வுடன் கூடிய ஒத்துழைப்பு, வாய்ப்புக் கிடைக்கும்போது, ஆட்சி எந்திரத்தின் அங்கமாகப் பொறுப்பேற்பது அவசியம் என்று கட்சி முக்கியஸ்தர்கள் பேசத் தொடங்கியது அவரை மேலும் காயப்படுத்தியது.














Add Comment