101. தீன் மூர்த்தி இல்லம்
பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.
இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த அகதிகளுக்காக டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டன. டெல்லியில் அகதிகள் பிரச்னை, கலவரம் என திமிலோகப்பட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் இந்திரா தன் நான்கு வயது மகன் ராஜிவ், எட்டு மாதக் குழந்தை சஞ்சய் இருவரோடு முசூரியில் இருந்தார்.
“டெல்லியில் நிலைமை சரியில்லை; குழந்தைகளை அழைத்துக் கொண்டு இப்போது டெல்லிக்குப் புறப்பட வேண்டாம்” என்று கணவர் ஃபெரோஸ் சொன்னதைக் கேட்காமல், ரயிலில் குழந்தைகளோடு டெல்லிக்குப் புறப்பட்டார் இந்திரா. ரயில் டெல்லியை நெருங்கிக் கொண்டிருந்தபோது வழியில் ஓரிடத்தில் திடீரென்று ரயில் நின்றது. வெளியில் கூச்சலும், குழப்பமும் அதிகமாக இருந்தது. ஜன்னலைத் திறந்து வெளியில் பார்த்தார் இந்திரா. ஒரு கும்பல், ஒரு மனிதரைத் தாக்கிக் கொண்டிருந்தது.
நேரு குடும்ப வரலாறை எளிமையாக சுவாரஸ்மாக இத்தனை வாரங்களாக தொடர்வது சாதனை. சிறிதும் போர் அடிக்கவில்லை. பாராட்டுக்கள்.